ரோம் நகரை சென்றடைந்த மைத்திரி!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரோமில் பிமியுசிதோ Fuimicino International Airport விமான நிலையத்தை நேற்று சென்றடைந்தார்.


ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாடு மற்றும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி இத்தாலியின் ரோம் நகருக்கு நேற்று பயணமானார்.

விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியையும் தூதுக் குழுவினரையும் அந்நட்டின் விசேட பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் ஒருங்கிணைப்பை பலப்படுத்தவும் இம்மாநாடு விரிவான பங்களிப்பை வழங்குகின்றது.

உலக வன வாரம் புதிய அறிவு மற்றும் இது வரையில் அடையப்பெற்றுள்ள முக்கிய அடைவுகள் குறித்து உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கான சிறந்ததோர் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

நாளை (16) ஆம் திகதி இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.