கடந்த அரசாங்கத்தின் தவறுகளை, நீங்களும் செய்யாதீர்கள்!

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை மேற்கொள்ளாதிருக்குமாறு கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொண்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் பதவிக்காகவும் இணைந்து தேர்தலில் களமிறங்கியபோது, நானும் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையின் பிரகாரம் ஆதரவு வழங்கினேன். எனினும், சில விடயங்களைப் பார்க்கின்றபோது எமக்கு கவலையாக இருக்கின்றது. இருவரும் தமது கட்சி தொடர்பில் சிந்திக்கின்றனர். எனினும், நாடு தொடர்பில் சிந்திப்பதில்லை. கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை நீங்கள் இருவரும் செய்ய வேண்டாம். அப்பாவி மக்களின் பொருளாதாரத்தினை அழிக்க வேண்டாம் என இந்த இரண்டு தலைவர்களுக்கும் நான் கூற விரும்புகின்றேன்.
Powered by Blogger.