வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் படுகாயம்!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று(30.06) பிற்பகல் இடம்பெற்ற விபத்து
ஒன்றில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 12 மணியளவில் புளியங்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக மோட்டார் சைக்கில் ஒன்றில் கடைக்குச் சென்ற வயோதிபர் ஒருவரை பின்னால் வந்த கார் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த வயோதிபர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த மைக்கல் டேவிட் என்ற 68 வயது வயோதிபரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது இரு கால்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.