யாழ் சண்டிலிப்பாயில் உயிர் வேண்டுமா? பைக் வேண்டுமா?-வாள் வெட்டுக்குழு!

உயிர் வேண்டுமா? பைக் வேண்டுமா? என கேட்டு சண்டிலிப்பாயில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் புரிந்துள்ளது.

சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று வீதியால் சென்றவர்களை வழி மறித்து தாக்குதல் தாக்கியும் மிரட்டியும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

முகங்களை துணிகளால் மூடிக்கட்டியவாறே அட்டகாசத்தில் ஈடுபட்டு இருந்தனர். வீதிகளால் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குத நடாத்தி உள்ளனர்.

அதன் போது வீதியால் வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை மறித்து , பைக் வேண்டுமா ? உயிர் வேண்டுமா ? என மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளனர்.

சண்டிலிப்பாய் இரட்டையர் புலம் வைரவர கோவிலை அண்டிய பகுதி, ஆலங்குளாய் , கல்வளை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 09 மணியளவில் எட்டு மோட்டர் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்களே அப்பகுதிகளில் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.