அனந்தி விக்னேஸ்வரனிற்கு என்ன அறிவிப்பு அறிவித்தார்??

அடுத்த மாகாண சபை தேர்தலில் போது சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக கலமிறங்க வேண்டும் என்றும் அவர் ஒரு மாற்று தலைமையிலான தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களுடனும் விருப்பத்துடனும் இருக்கின்றார்கள் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

நான் செல்கின்ற இடம் எல்லாம் துப்பாக்கி விவகாரம் தொடர்பில் என்னிடம் கேட்கப்படுகின்றது. ஆயுதத்திற்கு விண்ணப்பிப்பது வேறு. அதனை கையில் வைத்திருப்பது வேறு. ஆனால் அந்த விளக்கங்கள் தெரியாது வாத பிரதி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றது.

இதன் அடிப்படையில் கடந்த சபை அமர்வில் அவைத்தலைவரிடம் கேட்டிருக்கின்றேன் பாதுகாப்பு அமைச்சு எனக்கு ஆயுதத்தை கையளித்திருந்தால் அதற்கான அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) தொடர்பான பத்திரங்களை சபையிலே வைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முடிவுக்கு வந்திருக்கின்றது.

திட்டமிட்ட வகையில் அடுத்த மாகாண சபை தேர்தல் வருகின்ற போது எனக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற நன் மதிப்பை குறைப்பதற்காகவும், மறைமுகமாக எனக்கு ஓர் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு விவாதம். இந்த பிரச்சினை எழுந்த உடனேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உடனே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

குறிப்பாக பாராளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ எழுப்பப்படுகின்ற விவாதங்களுக்கு சட்ட நடவடிக்கையினை கோர முடியாது என்ற கருத்தை முன் வைத்ததன் அடிப்படையில் அம்பை எய்தது யார் என்று மக்கள் மத்தியில் மிகத்தெழிவாக இனம் காட்டப்பட்டுள்ளது.

தற்போது புதிது புதிதாக உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை சில பக்கங்களில் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எது எவ்வாறாக இருந்தாலும் பொய்கள் எப்போதும் உறத்து கூறப்பட்டாலும் கூட உண்மை ஒரு நேரம் வெளிவரும். அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் நான் அரசியலுக்கு வந்த பிறகு எதிர் கொள்ளத் தயாராக வந்திருக்கின்றேன்..

மக்கள் மிகத்தெழிவாக விளங்கி இருக்கின்றார்கள் இந்த பிரச்சினைகளின் சூத்திரதாரி யார்? என்று. தற்போது கொண்டு வருகின்ற பிரச்சினையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகின்ற முதலமைச்சருக்கு அதிக படியான வாக்குகளை பெற்றுக்கொண்ட பெண் என்ற வகையில் என் மீது சரமாறியாக தாக்குதல்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஆனால் உண்மையை விளங்கிக்கொண்ட எனக்கு வாக்களித்த மக்கள் மிகத்தெழிவான சிந்தனையில் இருக்கின்றார்கள். இவர்களுடைய இந்த கூச்சக்குழப்பத்திற்கு நான் அஞ்சப்போவது இல்லை. ஆனால் மக்கள் எதிர் வரும் தேர்தலில் அவர்களுடைய தீர்ப்பை மிக நிதானமாக வழங்குவார்கள்.

அடுத்த மாகாண சபை தேர்தலில் பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் கூட எதிர் பார்க்கின்றார்கள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக கலமிறங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கின்றார்கள்.

அது மட்டும் அல்ல மிக வெளிப்படையாக மக்கள் அமைப்புக்கள் குழுக்கள் ஆக முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை பேசி வருகின்றனர்.

எங்களிடமும் சரி முதலமைச்சரிடமும் சரி இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

நிச்சையமாக வாக்களிப்பவர்கள் மக்கள். எனவே யார் முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைத்தாலும் கூட அது மக்களின் விருப்பத்தெரிவாகவே அமையும்.

அதன் அடிப்படையிலே மக்கள் தன் தீர்மானிக்கப் போகின்றார்கள் யாரை முதலமைச்சராக கொண்டு வருவதன் ஊடாக எங்களுடைய உரிகைக்கான குரல் தொடர்ந்தும் பேனப்படும் என்பதனை மக்கள் தான் தீர்மானிக்கப் போகின்றார்கள்.

முதலமைச்சர் வேட்பாளராக யாரும் வரலாம்.மக்கள் தான் முடிவெடுக்கப்போகின்றார்கள் முதலமைச்சரா? எதிர்க்கட்சி தலைவரா என மக்களே முடிவு எடுப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.