மட்டக்களப்பு மாநகரசபையில் புதிய தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்னுமொரு கேபிள் தொலைக்காட்சி சேவைக்கு அனுமதி வழங்குவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆறாவது அமர்வு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

பகல் உணவு நேரத்திற்கு பின்னர் சபை மீண்டும் ஆரம்பமானபோது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாநகர முதல்வர்,

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே கேபிள் தொலைக்காட்சி சேவையொன்று நடைபெற்றுவருகின்றது.

இந்த நிலையில் கிழக்கு வடக்கில் மாகாணத்தில் ரைமஸ் மீடியா நெட்வேர் பிரைவேட் லிமிட்டட் (TRYMAS MEDIA NETWORK(PVT)LTD) இன்னுமொரு கேபிள் தொலைக்காட்சி தொலைக்காட்சிக்கு தொலைத்தொடர்பு ஒழங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான ஆட்சேபணைகள் இருந்தால் வழங்குமாறு 03-07-2018 டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகை ஊடாக கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடக்கில் கேபிள்களினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது.பல உயிரிழப்புகளும் வயர்கள் மின்சார தூண்களில் செல்வதனால் பல்வேறு கஸ்டங்களும் எதிர்நோக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மேலும் ஒரு கேபிள் தொலைக்காட்சி சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டால் அங்குள்ள நிலையே இங்கு ஏற்படும்.

எனவே எதிர்வரும் 03ஆம் திகதிக்கு முன்பாக இது தொடர்பான ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த கேபிள் தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்கவேண்டாம் என்ற தீர்மானத்தினை நிறைவேற்றி தொலைத்தொடர்பு ஒழங்குபடுத்தும் ஆணைக்குழுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தினை அவசரமாக கொண்டுவருகின்றேன் என்று தெரிவித்தார்.

இதற்கு மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்ததன் காரணமாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் அவற்றினை தொலைக்காட்சிக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.