அரசுப் பள்ளியில் தீண்டாமை: முற்றுகைப் போராட்டம்!
அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சமையல் செய்வதற்கு ஆதிக்கச் சாதி இந்துக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது
தொடர்பாக அப்பள்ளியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை அடுத்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்பத்தில் சாதனை என நாடு முன்னேறிக்கொண்டே சென்றாலும், தீண்டாமை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இதற்கு முன்பு இந்தப் பள்ளியில் வேறு சமூகத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவர் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். தற்போது சமையல்காரர் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான பாப்பம்மாள் என்பவர் தற்போது சமையல்காரர் பணியில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
"தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. அந்தப் பெண் சமைக்கக் கூடாது. பாப்பம்மாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறிப் பள்ளியின் வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர், சாதி இந்துக்கள்" எனத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமாரை மின்னம்பலம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசியபோது தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமைத்துப் போட்டு, எங்களுடைய குழந்தைகள் இந்தப் பள்ளியில் படிக்க வேண்டாம் என்று சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களுடைய குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அந்தச் சமையல்கார தலித் பெண்ணை வேறு பள்ளிக்கு மாற்றினால் மட்டுமே எங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம் என்று சாதி இந்துக்கள் கூறியுள்ளனர். இதற்குப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் சம்மதம் தெரிவித்து பாப்பம்மாளை பணிமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தெரியவந்ததையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் அந்தப் பள்ளிக்கு சென்று, ஏனைய இயக்கங்களின் துணையோடு அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். சாலை மறியலிலும் ஈடுபட்டோம்.
அதன் பின்னர், உதவி கலெக்டர், டிஎஸ்பி, ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரிகள் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், பாப்பம்மாளை அதே பள்ளியில் சமையல்காரராகப் பணியில் அமர்த்துகிறோம் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு சென்றோம்" என்று கூறினார்.
"திருமலைகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குடிப்பதற்குத் தனியாகத் தண்ணீர்க் குடமும், சாதி இந்து மாணவர்களுக்குத் தனியாக ஃபில்டர் தண்ணீரும் வைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதற்கு ஆசிரியர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். தமிழக சபாநாயகர் தனபாலின் ஊரில் இது போன்ற தீண்டாமை நடந்துள்ளது" என்கிறார் முத்துக்குமார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சாதிஎன்பதுவிதி??? அப்படியா..?? இவுங்க அழுகைக்கு பரிதாபம்லாம் பட வேணாம். திரும்பவும் அந்த பள்ளிகூடத்தலதான் சமைக்கணும்.. என்ன பண்ணலாம் சொல்லுங்க ???? இவுங்கள இடமாற்றம் செய்த அரசு அதிகாரிய என்ன பண்ண போறோம்????" என்று ட்விட் செய்துள்ளார்.
சத்துணவு அமைப்பாளர் பாப்பம்மாளுக்கு அதே பள்ளியில் மீண்டும் பணி நியமனமும், சாதி இந்துக்கள் மீது வழக்குப் பதிவுகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என அரசு மற்றும் ஆதிதிராவிட நலத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ர.ரஞ்சிதா

.jpeg
)

கருத்துகள் இல்லை