சசி படத்தில் இணைந்த ஜி.வி-சித்தார்த்!

சசி இயக்கும் அடுத்த படத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கவுள்ளனர்.


1998ஆம் ஆண்டு மாறுபட்ட கதைக் களம் கொண்ட, சொல்லாமலே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் இயக்குநர் சசி. அதன் பின் ரோஜாக் கூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து ஐந்து, பிச்சைக்காரன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். பூ திரைப்படம் விமர்சன ரீதியாக இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அப்படம் எழுத்தாளர் தமிழ்ச் செல்வனின் வெயிலோடு போய் என்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாகி இருந்தது.
பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து சசி இரட்டைக் கொம்பு என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் தற்போது அப்படத்தை கைவிட்டு வேறு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இன்று(ஜூலை 16) சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

இசையமைப்பாளராக சித்துகுமார் அறிமுகமாகிறார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகிகள், மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.