இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்கள்! வெள்ளவத்தையில் சந்தேகநபர் கைது!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பிரித்தானியாவின் இரண்டு ரக்பி வீரர்களின் மர்மமரணம் குறித்து கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 10ம் திகதி இலங்கை வந்த 22 பேர் கொண்ட பிரித்தானிய ரக்பி அணி, மே 12ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சினேகபூர்வ ரக்பி போட்டிகளில் பங்குகொண்டது.

இந்த போட்டியில் விளையாடிய இரண்டு பிரித்தானிய நாட்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெட் தோமஸ் ரீட் மற்றும் ஹாவட் தோமஸ் அன்ரு ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இந்த வீரர்களின் மரணத்திற்கு அதிக போதைப்பொருள் பாவனையே காரணமென தெரியவந்துள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவருக்கும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகநபர் வௌ்ளவத்தையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

#Wellawatta      #Court
Powered by Blogger.