பேரம் பேசுகின்றது அரசாங்கம் உரிமைகளை தர மறுக்கிறது?
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
509 ஆவது நாளாகவும் கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இன்று(வெள்ளிக்கிழமை) வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சந்தித்திருந்தார்.
இதன்போது அவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே சி.வி விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அங்கு மக்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட சி.வி விக்னேஸ்வரன்,
‘உங்களுடைய நிலங்களை பெற்றுத்தரவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் எப்படியாவது உங்களுடைய காணிகளை திருப்பி தராது இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அரசாங்கம் இருக்கின்றது. இதன்காரணமாக இதுவரையில் எமக்கு வெற்றி கிட்டவில்லை. ஆனால் உங்களுடைய பிரச்சினையை உலகறிய செய்திருக்கின்றோம்.
உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை குறைக்கும் எண்ணத்திலேதான் சிறு உதவிப்பொருட்களை இன்று கொண்டுவந்திருக்கின்றோம். முக்கியமாக குழந்தைகளுக்காக இந்த உதவிப்பொருட்களை கொண்டு வந்திருக்கின்றோம்.
இந்த உதவிப்பொருட்கள் உங்களுடைய அடிப்படை பிரச்சினையை போக்கும் என நாம் நினைக்கவில்லை. ஆனால் உங்களுக்கு இருக்கும் சிரமங்களை குறைக்க உதவும் என எண்ணுகின்றோம்.
மீண்டும் உங்களுடைய காணிக்குள் நீங்கள் பலாத்காரமாக போவதற்கு தீர்மானித்துள்ளீர்கள். இவ்வாறு நீங்கள் செய்வதால் இராணுவம் எந்தவிதமான நடவடிக்கையை எடுப்பார்கள் என கூறமுடியாது. விரைவில் உங்களின் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்காது அவர்களுடைய அரசியல் ரீதியான உரிமைகளை, தீர்வுக்களை பெற்றுக்கொடுக்காது அதைத் தருகின்றோம் இதைத் தருகின்றோம் கொஞ்சம் குறைத்து தருகின்றோம் என பேரம்பேசிக் கொண்டிருக்கின்றார்கள். எமது உரிமைகளை பறித்து வைத்துக்கொண்டு பேரம் பேசி எம்மை பணம் கொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்.
உங்கள் உரித்துக்களை நீங்கள் விட்டுக்கொடுக்காது போராடி வருகின்றீர்கள் அதை நாம் வரவேற்கின்றோம். அதேபோன்று தமிழ் மக்களும் தமது உரித்துகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அந்த உரித்துக்கள் கிடைக்கும் வரை நாம் குரல்கொண்டே இருப்போம்’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கான சைக்கிள்கள், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் முதலமைச்சரால் இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#c.v.Wigneswaran #Keppalavu #Tamilnews #G
overnment
overnment

.jpeg
)

கருத்துகள் இல்லை