பெண்கள் சிறப்புப் படை!

காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களில் ராணுவத்தினரையும் பாதுகாப்பு படையினரையும் கல் வீசித்
தாக்குவது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. இத்தாக்குதல்களை எதிர்கொள்ள பெண்களைக் கொண்ட சிறப்புப் படையை உருவாக்க சிஆர்பிஎஃப் முடிவு செய்துள்ளது.

இதற்காக பெண் கமாண்டர்களுக்கு இரவு நேரப் பாதுகாப்பு, ஆயுதங்களை நொடிப்பொழுதில் பழுது பார்த்தல், கவசமின்றி எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சமீபகாலமாக நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களால், பாதுகாப்புப் படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த மே 7ஆம் தேதி, சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆர்.திருமணி (22) என்ற பயணி நர்பல் பகுதியில் நிகழ்ந்த கல்வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.
Powered by Blogger.