சாம்பியன்ஸ் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியா!

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.


சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்தின் பிரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டமான இதை டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது. அதே சமயம் கட்டாய வெற்றியை எதிர்நோக்கிக் களமிறங்கியது நெதர்லாந்து அணி.

விறுவிறுப்பான முதல் பாதியில் இரு அணியினருக்கும் கோல் விழவில்லை. இரண்டாம் பாதியின் 47ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனையடுத்து 55ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் பிரிங்மேன் பதில் கோல் அடித்து 1-1 எனச் சமன் பெறச் செய்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்தப் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இதன்மூலம் 8 புள்ளிகள் பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.