பெண் எரித்துக் பரிதாபமாக கொலை!

ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்களை விற்று வந்ததாகவும், அதை தனது மகள் தட்டிக் கேட்டதால், மகளை கடத்தி கொலை செய்திருக்கலாம் எனவும், மாலதியின் தந்தை கூறியுள்ளார்.


மநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போன இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகில், இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு, அதன் அருகே கிடந்த பெண்ணின் துப்பட்டா, வளையல் போன்றவற்றையும் கைப்பற்றினர். பின்னர், ராமநாதபுரம் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், எரித்துக் கொல்லப்பட்டது, மாலதி என்ற இளம்பெண் என்பது தெரியவந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதி. கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாலதி, பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், தனது மகளை காணவில்லை என கூறி, மாலதியின் பெற்றோர், உத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும், கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.

இந்த புகார் மீது, கடந்த 11-ம் தேதியே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில்தான், உத்தரகோசமங்கைக்கு செல்லும் வழியில் உள்ள மிளகாய் குளிர்பதனக் கிடங்கு அருகே, பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாக, அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் மாலதியின் உறவினர்கள் சிலர் அங்கு சென்று பார்த்தபோது, உடல் அருகே கிடந்த வளையல்கள் மற்றும் துப்பட்டாவை வைத்து, கொல்லப்பட்டவர் மாலதிதான் என்பதை உறுதி செய்தனர்.

மகள் காணாமல் போனபோதே, சிவக்குமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறியிருந்தனர். ஆனால், போலீசார் அப்போதே முறையாக நடவடிக்கை எடுத்து தேடியிருந்தால், கொலை நடக்கும் அளவுக்கு போயிருக்காது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பெண் சடலம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், டின்ஏ பரிசோதனைக்குப் பிறகே, அது யாருடைய உடல் என்பதை உறுதி செய்ய முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Powered by Blogger.