சாவகச்சேரியில் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை!


எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையும் 06ஆம் திகதி க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் ஆரம்பமாகவுள்ளது.


இதனால் கோவில் திருவிழாக்களில், களியாட்ட நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் சத்தமாக பாவிப்பதால் மாணவர்கள் படிக்க முடியவில்லை.

எனவே மாணவர்களின் நலன் கருதி ஒலிபெருக்கி பாவனையை குறைத்து சத்தத்தை குறைக்குமாறும் பிள்ளைகளின் பெற்றோர்கள் சாவகச்சேரி பிரதேச சபையிடம் முறையிட்டனர்.

இதனால் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.