ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் !

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்
நகரில் அமைந்துள்ள கல்வித்துறை அலுவலகம் அருகே திடீரென இன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படுகாயம் அடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜலாலாபாத் பகுதியில் நேற்று நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.