அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பேச்சு!

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரிவசம் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பிரசாத் காரியவசம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களான ரொபேர்ட் அடெர்ஹோல்ட், டினா ரைடஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான பில் ஜோன்சனுடனும், பிரசாத் காரியவசம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான ஒத்துழைப்பு மற்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன் போது பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.