நீண்ட நாள் கனவு நிறைவேறியது- பிரதிமைச்சர் ம

Ėமன்னார் மாவட்டத்தில் நிரந்தர பேருந்து
தரிப்பிடமின்றி அவதியுறும் பயணிகளின் வினைத்திறன் மிக்க பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான பேருந்து நிலைய நிர்மாணத் திட்டம் எனது கனவு. அது இன்று நனவாகியது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,மாவட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் நகரில் நிரந்தர பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்ததாவது,
30 வருட கால போரில் சின்னாபின்னப் படுத்தப் பட்ட நகரங்களில் ஒன்றான மன்னார் நகரில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
எமது மக்களின் நீண்டகால தேவையொன்றான இந்த நவீன பேருந்து நிலையத்தை நிர்மாணிக்குமாறு வன்னி மக்களின் பிரதிநிதிகளான நாம் தொடர்ந்து விடுத்து வந்த வேண்டுகோளையடுத்து இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்றார்.

No comments

Powered by Blogger.