ஜேர்மனியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக ஜேர்மன் தலைநகரில் நேற்றுத் திரண்ட தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒளிப்படங்கள் உள்ளடக்கிய பாதகையைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தமிழின அழிப்பு போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நேற்றைய தினம் Brandenburger Tor வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றது. இக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சில மக்களின் நிழற்படங்கள் உள்ளடக்கிய பாரிய பதாதையை மக்கள் தாங்கியவாறு நீதி கோரினர்.அத்தோடு இப் போராட்டத்தில் கலந்துகொண்ட உயர்கல்வி மாணவர்களால் ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரலெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.