கதிர்காம யாத்திரிகர்களுக்கு – கடற்படையினர் அன்னதானம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து
பாதயாத்திரையாக கதிர்காமம் கந்தன் ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்குக் கடற்படையினர், அன்னதானம் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
தென்கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி ரியர் அத்மிரல் ருவான் பெரேராவின் வழிக்காட்டலின் கீழ் கடற்படையினர் கடந்த 4 ஆம் திகதி முதல் இந்தத் தொண்டுப் பணிகளை ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றனர்.
கடினமான வழிகள் ஊடாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கடற்படையினர் செய்து கொடுத்து வருகின்றனர்.
உணவு, குடிதண்ணீர், உலர் உணவுகள் போன்றவை இவற்றில் பிரதானமாகும். மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளையும் கடற்படையினர் வழங்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.