முல்லைத்தீவில் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு!

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை அண்மித்துள்ள சிவந்தா முறிப்பு பகுதியில் தமிழ் மக்களு க்கு சொந்தமான விவசாய காணிகளையும், குளம் ஒன்றிணையும் ஆக்கிரமிப்பதற்கு சிங்கள மக் கள் மேற்கொண்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சிவந்தா முறிப்பு பகுதி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியாகும். இந்த பகுதியில் திட் டமிட்டவகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தமது விவசாய தேவைக்காக தமிழ் மக்களின் காணிகளை

தொடர்ந்தும் ஆக்கிரமிப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்றய தினம் மேற்படி பகுதியில் கனரக வாகனங்களுடன் வந்த சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு சொந்தமா ன பெருமளவு விவசாய நிலங்களையும், குளம் ஒன்றையும்

ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனை அறிந்த தமிழ் மக்கள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் இணைந்து குறித்த பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறி த்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகையில்,

கொக்கிளாய் சிவந்தாமுறிப்பு பகுதியில் இன்றைய தினம் காலை ஒரு தொகை சிங்கள மக்கள் தமிழ் மக்களுடைய விவசாய நிலத்திற்குள் புகுந்து அவற்றை துப்புரவு செய்வதற்கும், அங்குள்ள குளம் ஒன்றை மூடுவதற்கும் முயற்சிப்பதாக பொதுமக்கள் எமக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இதனடிப்படையில் மக்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்தபோது, பல நூற்றுக்கணக்கான நிலத்தை கபளீகரம் செய்யும் நோக்கில் கனரக வாகனங்களுடன் வந்திருந்த சிங்கள மக்கள், மகாவலி அதிகாரசபையினால் தமக்கு அந்த காணிகள் வழங்கப்பட்டதாகவும்,

அந்த காணிகள் தமக்கு சொந்தமானவை எனவும் வாதிட்டனர். ஆயினும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளாததுடன், அந்த காணிகள் எங்களுக்கு சொந்தமானவை என்பதை கூறி கடுமையாக வாதிட்டதுடன்,

எங்களுடைய மக்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்பதையும் கூறியிருந்தோம். எனினும் அவர்கள் தொடர்ச்சியாக கடும்போக்கை கொண்டிருந்த நிலையில் உடனடியாக மாவட்ட செயலருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை

தெரியப்படுத்தியதுடன், கமநலசேவை திணைக்களத்திற்கும் கூறியிருந்தேன். பின்னர் கரைதுறைப் பற்று பிரதேச செயலருக்கும் சம்பவம் தொடர்பாக கூறியதையடுத்து பிரதேச செயலர் மற்றும் கமநலசேவை திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததுடன்,

மாவட்ட செயலர் எமது முறைப்பாட்டினை மகாவலி அதிகாரசபை அதிகாரிகளுக்கு கூறியதன் அடிப்படையில் அவர்களும் சம்பவ இடத் திற்கு வந்திருந்தனர். இதன் பின்னர் மேற்படி காணி சிங்கள மக்களுக்கு சொந்தமனதல்ல.

அது தமிழ் மக்களுடைய விவசாய காணிகள் என்பதை அதிகாரிகள் சிங்கள மக்களுக்கு கூறிய துடன் அங்கிருந்து வெளியேறுமாறும் கூறினர். இதனையடுத்த தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் முயற்சியை கைவிட்டு சிங்கள மக்கள் வெளியேறி சென்றனர்.

இவ்வாறு தமிழ் மக்களுடைய காணிகளில் அடாத்தாக குடியேறிய சிங்கள மக்கள், தமிழ் மக்களுக்கு சொந்தமான மீதி காணிகளையும் கபளீகரம் செய்வதற்கு இதேபோல் பல தடவைகள் முயற்சித் துள்ளார்கள்.

இது தொடருமானால் மக்களும் மக்களுடன் இணைந்து நாங்களும் வீதிகளில் இறங்கி போராடவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும் என்றார்.

No comments

Powered by Blogger.