மஹிந்தவினால் வடக்கு மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை!

மண்ணை வென்ற மஹிந்தவினால் மக்களின் மனங்களை வெல்ல முடியாமல் போதற்கான காரணத்தை அமைச்சர் மனோ கணேசன் வெளிப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக யுத்தத்தை நடத்த பயன்படுத்திய அதே குழுவை, சமாதானத்திற்கும் பயன்படுத்தியமையினாலேயே, அவரால் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்தத்தினால், மனித உரிமை மீறல்களினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றார்கள். இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் வளப்பங்கீடு முறையாக கிடைக்க வேண்டும் என நாங்கள் போராடி வருகின்றோம்.

யுத்தம் நிறைவடைந்து எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் பத்து ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. நிலத்தினை வென்ற அரசாங்கத்திற்கு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்
Powered by Blogger.