தமிழ் மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்!

காணாமல்போனோருக்கான அலுவலகமானது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காணாமல்போனோரின் உறவினர்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் போராசிரியருமான திஸ்ஸ விதாரண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணாமல்போனோருக்கான அலுவலகம் கடந்த காலங்களில் பலரது எதிர்ப்புக்களின் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதுவரை காலமும் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகவே செயற்பட்டு வருவதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுரை எவ்வித திருப்திகரமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள திஸ்ஸ விதாரண இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அலுவலகத்தை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் முற்றிலும் மாறுப்பட்டதாகவே காணப்படுவதாகவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

அதவாது மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த ஆணைக்கழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திஸ்ஸ விதாரண ஏனைய ஆணைக்குழுக்களை விட இதற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே காணாமல்போனோர் அலுவலகத்தினர் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உண்ர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என்றும் திஸ்ஸ விதாரண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.