ஷூட்டிங்கை முடித்த நயன்தாரா டீம்!

நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூலை 10) நிறைவடைந்துள்ளது.


பிரதான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து படத்தின் பணிகள் தாமதமாக கடந்த ஜூன் 27ஆம் தேதி இசை மற்றும் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் சைக்கோ கொலைகாரனாக நடிக்கிறார். நேற்று பல்லாவரத்திலுள்ள மால் ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பில் அனுராக் காஷ்யப் மட்டுமே கலந்துகொண்டார். அங்குள்ள திரையரங்கில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் பின்னால் உள்ள மலையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதோடு ஒட்டுமொத்த காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் இயக்கிய டிமான்டி காலனி திரைப்படம் நல்ல கவனம் பெற்றது.

சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடிக்கிறார். அவரது கணவராக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அதர்வா, ராஷி கண்ணா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு விரைவில் வெளியீடு குறித்த அறிவிப்புகளை வெளியிடும். 
Powered by Blogger.