மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கு நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு தள்ளுபடி!

திருவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு தள்ளுபடி
செய்யப்பட்டது.விருதுநகர்  மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், கைதாகி மதுரை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி  மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் கோரி, திருவில்லிபுத்தூர்  மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுக்கள் மீது நேற்று விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி முத்துசாரதா, இருவரின்  ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

No comments

Powered by Blogger.