காளான் சால்ட் அண்ட் பெப்பர்!

என்னென்ன தேவை?

காளான் - 100 கிராம், மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
பூண்டு, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு,
வறுத்து உடைத்த மிளகு - சிறிது.

எப்படிச் செய்வது?

காளானை இரண்டாக நறுக்கி, சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து சூடான எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, வறுத்த காளான், சோயா சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள், உடைத்த மிளகு, ஸ்ப்ரிங் ஆனியன் போட்டு கலந்து சூடாக பரிமாறவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.