காதல் தவிர வேறில்லை: டி.ஆர்

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் திரைப்படத்திற்கு ‘இன்றைய காதல் டா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்... என பன்முகம் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வீராசாமி. தற்போது, 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்பட இயக்கத்தில் இறங்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என் காதலி உட்பட பல படங்கள் சூப்பர் ஹிட்டானவை.
தற்போது டி.ஆர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் இயக்கி, தயாரிக்கப்படும் திரைப்படம் ‘இன்றைய காதல் டா’. இதில் நமீதா டான் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், பாண்டு மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் புதுமுகங்களும் நடிக்கவிருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப முழுக்க, முழுக்க காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது இப்படம். காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு டி.ராஜேந்தரே பாடல்கள் எழுதுவதோடு, இசையமைக்கவும் உள்ளார்.

Powered by Blogger.