ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கிய கஜினிகாந்த்


ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படத்தற்கு பாலமுரளிபாலு இசையமைக்கிறார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் தணிக்கை அதிகாரிகள் பார்த்த இப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து ஜூலை 27ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது சில காரணங்களில் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.