இராணுவ வீரர் ஒருவர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதி இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், நேற்று பிற்பகல் அருகில் இருந்த காவலரணை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கரடி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இராணுவ வீரர் உடனடியாக முல்லைத்தீவு ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக பதவியா பிரதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.