நேஷனல் ஜியோகிராபியில் கமல்!

நேஷனல் ஜியோகிராபி சேனலில் வெளியாகவுள்ள தொடர் ஒன்றில் கமல்ஹாசன், விராட் கோலி ஆகியோரைப் பற்றிய நிகழ்ச்சி வெளிவரவிருக்கிறது.

இந்திய சினிமாவில் ஒரு முன்னணி ஆளுமையாக இருப்பவர் கமல்ஹாசன். தற்போது அரசியலிலும் ஈடுபட்டுவருகிறார். அதுபோல, தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும் அணித் தலைவராகவும் இருந்துவருகிறார் விராட் கோலி. இப்படியான இரு வேறுபட்ட துறைகளில் முக்கிய ஆளுமையாக இருந்துவரும் இருவர் குறித்தும் நேஷனல் ஜியோகிராபி சேனலில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘மெகா ஐகான்ஸ்’ எனும் புதிய தொடரில் விவரிக்கப்படவுள்ளது.வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ள இந்தத் தொடரானது வெறும் சாதனைகளை மட்டுமே விளக்கும் வழக்கமான ஒரு தொடராக இல்லாமல், பிரபலங்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளிவிவரங்கள் கள ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்படவிருக்கிறது.

இம்மாத இறுதியில் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படவுள்ள மற்ற பிரபலங்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த மேலதிகத் தகவல்கள் ஆகியன வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.