தேர்வில் கவனம் செலுத்தும் மகிமா

சாட்டை திரைப்படம் மூலம் கவனம் பெற்ற நடிகை மகிமா
தற்போது படப்பிடிப்பைவிட தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை மகிமா நம்பியார் 2012ஆம் ஆண்டு இயக்குநர் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார். அதன்பின் சில படங்கள் நடித்திருந்தாலும் குற்றம் 23 படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலமாகவும், சசிகுமாருடன் கொடிவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகவும் தமிழில் அவர் முன்னணி நடிகையானார். பின் அருள்நிதியுடன் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. இவை தவிர தற்போது விக்ரம் பிரபு மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் ஜோடியாக ஒவ்வொரு படத்திலும் நடித்துவருகிறார்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 10) தொடங்கும் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கில இலக்கியத் தேர்வை எழுத உள்ளார் மகிமா. இதற்காக ஒரு மாத காலத்துக்கு எந்தப் படப்பிடிப்பும் இல்லாதவாறு கால்ஷீட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார். இரண்டாம் ஆண்டு தேர்வு என்பதால் முழு கவனத்துடன் எழுதி எம்.ஏ பட்டம் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தேர்வு முடிந்ததும் மம்மூட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார்.

Powered by Blogger.