கனேடிய பிரதமர் இலங்கை குறித்து வெளியிட்ட கருத்து என்ன?

இலங்கையில் நிலையான சமாதானத்துடன் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுள் ஒன்றான கறுப்பு ஜூலையின் 35ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக தெரிவித்த பிரதமர், அவர்களது குடும்பத்தாருக்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமென கனேடிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கத்துடன் கனடா எப்போதும் இணைந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.