அபுதாபி வங்கியில் பணியாற்றி காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாபர். கடந்த 9 ஆண்டுகளாக அபுதாபியில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த இவர் கடந்த வாரம் திடீரென்று காணாமல் போனார்.

இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு,
தேடிவந்த நிலையில் அபுதாபி புறநகர் தொழிற்பேட்டை பகுதியான முசாஃபா என்னும் இடத்தில் ஜாபரின் பிரேதம் கிடைத்தது. அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பிரேதத்தை ஜாபரின் சகோதரர் முனீர் நேற்று அடையாளம் காட்டினார்.

திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான ஜாபரின் மரணத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Powered by Blogger.