காதலை ஏற்றுக்கொள்ளாததால் சிறுவனின் முகத்தை பிளேடால் கிழித்த பெண்

காதல் விவகாரங்களில் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் சமீபகாலங்களில் தாக்கப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது காதலை ஏற்க மறுத்ததால் சிறுவனின் முகத்தை பிளேடால் கிழித்து அந்த பெண் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இதுதொடர்பான விசாரணையில், அந்த பெண் சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்து காதலை சொன்னபோது அதனை அவன் ஏற்க மறுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெண், பிளேடால் அவனது முகத்தில் மிக ஆழமாக கிழித்து ரத்த வெள்ளத்தில் அவனை அங்கேயே விட்டுவிட்டார்.

இந்த வழக்கில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய போது, போலீசார் முன்னிலையில் தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.