கழுகுக்கும் பருந்துக்கும் படையலிடுங்கள்.!

ஊமைக்கீதமாய் உறங்கிப் போன துயர்
ஏழு மாதம் கடந்த பின்தான்
பெற்ற தாய்க்கும் புலப்பட்டதோ?
பதினெட்டுக் காவல் பேய்கள்
பார்த்திருந்து காவல் காத்தது
இளையவள் உடலை ருசித்திடவோ?
ஊமையின் வேண்டுதலை இறைவனும்
உணரக் காலம் கடந்ததும் ஏன்?

கடவுளும் செவிப்புலன் இழந்தவனா?
கல்லில் செதுக்கிய
கண் கொண்ட கடவுளுக்கு
கண்ணில் உயிர் தேடல் அறியாமையே...

கண்களைக் கட்டிக் கொண்ட
காந்தாரியாய் நீதி தேவதை.
துச்சாதனனைப் பெற்றவளுக்கு
துகிலுரிப்பு பிழையாகுமா?

குறிவிறைப்புக் குதறலில்
கிழடும் அடக்கமடா....
பெற்ற தாயோடும் மகளோடும்
சகோதரியோடும் இந்த
எருமைகள்  எப்படி மரியாதை
காட்டினவோ?
நாய்ப் பிறப்புக்களுக்கு
மகளென்ன தாயென்ன ?

இழி பிறவிகளைப் பெற்ற
தாய்மாரே! சகோதரிகளே!
மனைவியரே! மகள்மாரே!
நீங்கள் உத்தமப் பிறவிகள் என
நிறூபிக்க ஒரு வழியுண்டு
அவர் குறிகளை அறுத்து
கழுகுக்கும் பருந்துக்கும்
படையலிடுங்கள்.
மீதிக் காலம் சாகும் வரை
ஆடையில்லாமல் அலையவிடுங்கள்.
காண்போருக்கு காறித் துப்பவும்
கனதியான பாடமாகவும் அமையுமது.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Powered by Blogger.