எஸ்பிகே நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு நிறைவு - ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்

இந்நிலையில், பாலையம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, அருப்புக்கோட்டையிலும் செய்யத்துரை உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடந்தது.
மேற்கண்ட சோதனைகள் இன்று மாலை நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். கட்டுக்கட்டாக ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை