தொழிலாளிக்கு சுய தொழில் தொடங்க  ஆட்டோ வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய தொழில் தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மரிய சிலுவை என்பவருக்கு சுய தொழில் தொடங்க பெருநிறுவனங்களில் சமூக பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் ஆட்டோவினை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், சப்-கலெக்டர் அனு,கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்,துணை கலெக்டர் முத்துமாதவன், முன்னாள் எம்.எல்.ஏ.மோகன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.