வவுனியாவில் கடும் வறட்சி- குடி தண்ணீர் வழங்கும் நடவடிக்கைகள் தீவிரம்!!

கடும் வெயில் சுட்டரிக்கும் நிலையில் வவுனியாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. வறட்சி காரணமாக வவுனியாப் பிரதேச செயலலாளர் பிரில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிப்பப்பட்டது. அந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் செயற்பாடுகளை பிரதேச செயலலர் கா. உதயகுமார் மேற்கொண்டுள்ளார்.

வவுனியா பிரதேசத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெளுக்குளம் பகுதிக்கு பிரதேச செயலகம் மற்றும் தமிழ் தெற்கு பிரதேச சபையின் உதவிகளுடன் தண்ணீர்த் தொட்டிகள் அப்பகுதிகளில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன.

மகாறம்பைக்குளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம் போன்ற பகுதிகளிலும் குடிதண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.