தொடக்கமே பிழைபோலத் தெரிகிறது என் எண்ணம் தவறானது!

என்னுடைய எண்ணம் தவறாகிவிட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“வடக்கை வந்து பார்த்து மக்களின் கருத்துக்களை அறிந்து செல்லுமாறு நீங்கள் விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒத்துக்கொண்டுள்ளாரே. இதுபற்றி?” உங்களுடைய எண்ணப்பாடு என்னவென்ற வாராந்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
“ஆம். அவர் தனி சிங்களத்தில் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அவற்றை மொழிபெயர்க்கக் கொடுத்துள்ளேன். தொடக்கமே பிழைபோலத் தெரிகிறது.
மேலும் நான் அவருக்கு வடக்குக்கு வந்து செல்லுமாறு கூறியதன் பின்னரே அவர் விஜயகலா சம்பந்தமாக அவரிடம் சம்மதம் பெறாமல் அவருடனான கருத்துப் பரிமாற்றங்களை வலைப்பின்னல்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இது ஒரு குற்றமாகக் கணிக்கக்கூடிய விடயம். குறித்த நபரை வடக்கிற்கு வருமாறு அழைத்ததின் பின்னர் நடைபெற்ற அவர் சார்பான நிகழ்வுகளும், அவர் பற்றி என் கொழும்பு நண்பர்கள் கூறிவருவதும் அவ்வளவு ஏற்புடையதாகத் தெரியவில்லை.
இவர் வடக்கு வந்து உண்மையை அறிந்து தெற்கிற்கு தெரியப்படுத்தக்கூடிய ஒருவராகத் தெரியவில்லை. நான் அவரை காலஞ்சென்ற விஜய் குமாரணதுங்க போன்ற ஒருவர் என்றே முதலில் எண்ணினேன். என் எண்ணம் தவறென இப்போது தெரிகின்றது” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.