கொழும்பு ஹோட்டலில் பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம்!

இலங்கையின் சிங்கள நடிகை ஒருவர் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு நேர விருந்திற்காக சென்ற பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கும் வேறு சிலருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு குறித்த நடிகை தகாத வகைகளில் பேசியவாறு அங்குள்ளவர்களுடன் மோதலில் ஈடுபட்டதனை நபர் ஒருவர் காணொளியாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தன்னை தாக்கியதாக கூறி தகாத வார்த்தைகளினால் அவர் அங்கிருந்தவர்களை திட்டியுள்ளார்.
கொழும்பு ஹோட்டல் ஒன்றிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கிரிபத்கொட ஹோட்டலிலும் இதற்கு முன்னர் அவர் இவ்வாறு இந்த மோதலை ஏற்படுத்தி கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
Powered by Blogger.