கொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலை ஒன்றில் திடீர் தீ விபத்து!

கொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆய்வு கூடம் அமைந்துள்ள கட்டடத்தில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவல், எட்டு தீயணைப்பு வாகனங்களை கொண்டு அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் அதிகாலையில் தீப்பற்றியதால் மாணவர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என பாடசாலை அறிவித்துள்ளது. 

Powered by Blogger.