வவுனியாவில் பெண்னொருவர் செய்த பசுக் கொலை!

வாழ்­வா­தா­ரத்­துக்­காக வளர்க்­கப்­பட்ட நான்கு பசுக்­கள் விசம் வைத்­துக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் வவு­னியா செட்­டிகு­ளம் அருகே நடந்­துள்­ளது.

இந்­தக் கொலை­க­ளைப் புரிந்­தார் என்று அயல் கிரா­மத்­தி­லுள்ள பெண் மீது பொது­மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­யதை அடுத்து பொலி­ஸார் அவ­ரைக் கைது செய்­த­னர்.

செட்­டி­கு­ளம் பிர­தே­சத்­துக்­குட்­பட்ட தட்­டாங்­கு­ளம் பகு­தி­யில் இரு­வ­ரால் வளர்க்­கப்­பட்ட பசு­மா­டு­கள் நான்கு ஒரே நேரத்­தில் நேற்று திடீ­ரென இறந்து கிடந்­தன.

குழப்­ப­ம­டைந்த உரி­மை­யா­ளர்­கள் செட்­டி­கு­ளம் பொலி­ஸார், மற்­றும் கால்­நடை மருத்­து­வ­ருக்­குத் தக­வல் வழங்­கி­னர். சம்­பவ இடத்­துக்கு விரைந்த கால்­நடை மருத்­து­வர் இறந்த பசு­மா­டு­களை சோத­னை­யிட்­டார். மாடு­கள் அனைத்­தும் விசம் அருந்­தியே இறந்­துள்­ளன என்று உறு­திப்­ப­டுத்­தி­னார்.

குழப்­ப­ம­டைந்த ஊர் மக்­கள் அய­லில் உள்ள சிங்­க­ளக் கிரா­மம் ஒன்­றி­லுள்ள பெண்ணே மாடு­க­ளின் சாவுக்­குக் கார­ணம் என்று குற்­றஞ்­சாட்­டி­னர்.

தனது தோட்­டத்­தி­னுள் மாடு­கள் நுழை­வ­தாக முன்­னமே அந்­தப் பெண் முரண்­பட்­டி­ருந்­தார் என்று கார­ணம் கூறி­னர். அவரை உட­ன­டி­யா­கக் கைது செய்­யு­மாறு பொலி­ஸா­ரு­ட­னும் ஊர் மக்­கள் முரண்­பட்­ட­னர். நில­மை­யைச் சீர­செய்­வ­தற்­காக குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பெண் கைது செய்­யப்­பட்­டார்.

ஒரு­வ­ருக்கு சொந்­த­மான மூன்று பசு­மா­டு­க­ளும் இன்­னு­மொ­ரு­வ­ரு­டைய ஒரு பசு­மா­டு­மாக நான்­கு­மா­டு­கள் இறந்­துள்ளன. மேலும் இரண்­டு ­மா­டு­கள் விசம் உட்­கொண்ட நிலை­யில் காப்­பாற்­றப்­பட்­டன. இறந்த பசுக்­க­ளின் பெறு­மதி நான்கு இலட்­சம் ரூபா என்று தெரி­விக்­கப்­பட்­டது

No comments

Powered by Blogger.