முதலமைச்சருடன் முரண்பாடு இல்லை - இமானுவேல்!

தமக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் சதி இடம்பெறுவதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் தெரிவித்துள்ளார்.

தமக்கான வதிவிடம் ஒன்றை வாடகைக்குப் பெற்றுக் கொள்வதற்காக முதலமைச்சரிடம் விண்ணப்பித்திருந்ததாகவும், அந்த கோரிக்கையை முதலமைச்சரே நிராகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதுதொடர்பில் எமது செய்திப் பிரிவுக்கு விளக்கமளித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர், இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டார்.

தமக்கான வதிவிடத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து மாநகரசபையின் அமர்வில் தாம் கருத்து வெளியிட்டிருந்த போதும், முதலமைச்சரால் அந்த கருத்து நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.