சூர்யாவிடம் கற்றுக்கொண்ட விஷயம்!

நடிகர் சூர்யாவிடமிருந்து உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைக் கற்றுக்கொண்டதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.

பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். அதன் பின்னர் ஃபிடா படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர், தமிழில் இயக்குநர் விஜய்யின் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படங்களுக்குப் பிறகு தமிழின் முன்னணி நடிகர்களான தனுஷுடன் - மாரி 2, சூர்யாவின் - நந்த கோபாலன் குமரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் தீவிரமான ரசிகை என்று ஏற்கனவே பல பேட்டிகளில் கூறிவந்த சாய் பல்லவி, நேற்று (ஜூலை 23) சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். கடவுள் உங்களுக்கு அனைத்து மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக. உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.