யாழ் மணியந்தோட்டம் பகுதியில் பெரும்பரபரப்பு??

யாழ்.மணியந்தோட்டம் 1ம் குறுக்கு தெரு பகுதியில் யாழ்.பிரதேச செயலகம் குளம் ஒ ன்றை புனரமைப்பு செய்யும்போது குளத்தி லிருந்து புகை வந்ததால் புனரமகப்பு நிறுத் தப்பட்டுள்ளதுடன் குளத்தை ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மணியந்தோட்டம் 1ம் குறுக்கு தெரு பகுதி யில் உள்ள குளம் ஒன்றை யாழ்.பிரதே செ யலகம் புனரமைப்பு செய்துள்ளது. இதன் போது குளத்திற்குள் இருந்து புகை வந்து ள்ளது.

மேலும் குளத்திற்குள்ளிரிந்து நாக பாம்பு ஒன்றும் வந்துள்ளது. இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இத னையடுத்து பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராமசேவகர், பொலிஸார் இன்று காலை குளத்தை பார்வையிட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து யாழ்.பொலி ஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுத் துள்ளனர். குறித்த குளத்திற்குள் வெடி கு ண்டுகள் இருக்கலாம் என அதிகாரிகளும் பிரதேச மக்களும் அச்சம் தெரிவிக்கும் நிலையில் விசேட அதிரடிப்படையினருடைய ஒத்துழைப்புடன் குளத்தை ஆய்வு செய்ய தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.