யாழில் கிரீஸ் மனிதர்கள் என செயல்படுவது காவல்துறையா??

யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் எதுவும் இல்லை எனவும், இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர்,“ யாழ்ப்பாணத்தில் தற்போது சுமூக நிலை நிலவுகிறது. கிரீஸ் மனிதர்கள் என மர்ம மனிதர்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை.

யாழ்ப்பாணத்தில் தற்போது ஆவா குழுவினரின் செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் வீதிகளில் வெட்டியாக திரியும் சிலரின் செயற்பாடுகள் மக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 நான்கு பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.