யாழில் ஆண்குழந்தை பிரசவித்த பெண் உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்த இளம் குடும்பப் பெண் சில மணி நேரத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.காரைநகர் களபூமியைச் சேர்ந்த 21 வயதான குடும்பப் பெண்ணான இந்திரன் சிவகலா பிரசவத்துக்காக இம்மாதம்-16 ஆம் திகதி காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்காக நேற்றுக் காலை(22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சத்திரசிகிச்சையின் போது ஆண்குழந்தையைப் பிரசவித்த தாயார் சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட உயர் குருதி அமுக்கமே குறித்த பெண்ணின் உயிரிழப்புக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.