கிளிநொச்சியில் பெரும்போக விதைப்புக்காக காத்திருப்பு!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் 2018ம் ஆ ண்டு சிறுபோகத்தில் பெறப்படும் நெல்லை நம்பியே காலபோக விதைப்புக்காக காத்திரு க்கிறோம். என இரணைமடு விவ சாயிகள் சம்மேளனத்தின் செயலாளர் மு.சி வமோகன் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்கொண்ட சிறுபோகத்தின் அறுவடை தற்போது இடம்பெறுகின்றது. இதில் ஏக்கரிற்கு 30 மூடையை அண்மித்த அறுவடை கிடைத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் . தற்போது பெறப்படும் நெல்லை உடனடியாக சந்தைப்படுத்துவதன் மூலம் மூடைக்கு 2 ஆயிரத்து 600 ரூபாவினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளபோதும் காலபோக விதைப்பினையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

தற்போது ஆயிரத்து 800 ஏக்கரிலும் சுமார் 50 ஆயிரம் மூடையே பெற்றுக்கொண்டிருக்க முடியும் இதனை சீர் செய்து பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் இந்தச் சிறுபோகத்தின் நெல்லை விதைப்பதன் மூலமே 85 வீத பயிரை எதிர் பார்க்க முடியும்.

ஒரு ஏக்கர் நிலத்தை விதைப்பதற்கு ஒரு மூடை நெல் வேண்டும். என்பதன் அடிப்படையில் தற்போது சிறுபோகத்தில் பெறப்பட்ட நெல்லை சீர் செய்து பராமரிப்பதன் மூலம் செப்ரெம்பர் மாதகாலத்தில் விதையினத்திற்கு 3 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யம் சந்தர்ப்பம் விவசாயிகளிற்கும் கிடைப்பதோடு மாவட்டத்தின் ஏனைய விவசாயிகளிற்கும் தட்டுப்பாடு அற்ற நம்பகமான நல்லிண விதை நெல்லை பெற்றுக்கொள்ள முடியும். 

No comments

Powered by Blogger.