யாழ்.மாநகரசபை பிரதி மேயருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவரே இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் பிரதி மேஜர் தன்னை அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும்

 நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்  அது தொடர்பிலையே தன்னை பிரதி மேஜர் அச்சுறுத்தினார் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.