கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் அடாவடிதனத்துடன் கோரிய தகவல்கள்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் கோரிய தகவல்களை வைத்தியசாலைத் தரப்புக்கள் வழங்க மறுத்தபோதும் அதேவிபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மிகவும் இலகுவாகப் பெற்றதாக
சுட்டிக்காட்டப்படுகின்றது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 25ம் திகதிக்கும் மே30ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குழந்தைப் பேற்றில் ஈடுபட்ட தாய்மாரின் முகவரியுடன்கூடிய விபரத்தினை எழுத்தில் கோரியிருந்தனர்.

இருப்பினும் குறித்த விபரம் சட்டப்பிரகாரம் நேரடியாக  வழங்க முடியாது. குறித்த விபரத்தினை மத்திய சுகாதார அமைச்சிடம் கோருமாறு பதிலளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த விபரத்தினை பெறுவதில் தீவிரம் காட்டிய பொலிசார் வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளின் விபரங்களிற்கு தனியார் காப்புறுதி நிறுவனங்கள் வைத்தியசாலைகளில் பிறக்கும்

குழந்தைகளின் இல்லங்களை நாடிச் சென்று காப்புறுதி செய்யுமாறுகோருவது வழமை என்றதன் அடிப்படையில் அந்த விபரங்களையும் கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள 4 பிராந்திய சுகாதார நிலையங்கள் உள்ளன.

அவ்வாறுள்ள 4 பிராந்திய சுகாதார நிலையங்களின் கீழ் 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவ்வாறுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறித்த

பிரதேசமாக இருக்கலாம் எனக் கருதிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிலவற்றில் இருந்து   தனிப்பட்ட ரீதியில் குறித்த தகவலைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக திணைக்களங்களிலும் சட்டரீதியில் பின்பற்றும் நடைமுறையில் சட்டமுரணாகவோ அல்லது மாற்றுவழிகளிலோ தற்போதும் தகவல்கள் கசியும் செயல்பாடும் உள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

No comments

Powered by Blogger.