கிளிநொச்சி மாவட்டத்தில் குறைவடைந்த டெங்கு தாக்கம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டினை விட இவ்வாண்டிண் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் குறைவாகவே கானப்படு கிறது.


மேற்கண்டவாறு கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.குமாரவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துக் காணப்படுவதாக ஊடகங்கள் கூறியுள்ளன.

 ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு டெங்கு நோயின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  கருத்துத்தெரிவிக்கையில்,

 கிளிநொச்சி மாவட்டததில் டெங்கு நோயின் தாக்கமானது குறைவாகவே காணப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 75 பேரும்

பெப்ரவரி மாதத்தில் 128 பேரும் மார்ச்மாதத்தில் 120 பேரும் ஏப்ரல் மாதத்தில் 89 பேரும் மே மாதத்தில 54 பேரும் யூன் மாதத்தில் 67 பேரும் யூலை மாதத்தில் 103 பேரும்

ஆகஸ்ட் மாதத்தில் 51 பேரும் செம்ரம்பர்; மாதத்தில் 40 பேரும் ஒக்டோபர் மாதத்தில் 46 பேரும் நவம்பர் மாதத்தில் 40 பேரும் டிசம்பர் மாதத்தில் 17 பேரும் டெங்கு நோய்;த்தாக்கத்திற்குள்ளாகியிருந்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 38 பேரும் பெப்பரவரி மாதத்தில் 30 பேரும் மார்ச் மாதத்தில் 29 பேரும் ஏப்ரல் மாதத்தில் 18 பேரும் மே மாதத்தில் 22பேரும்

யூன் மாதத்தில் 36 பேரும் இந்த மாதத்தில் 13ம்திகதிவரையுமான காலப்பகுதியில்   11 பேரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனத்தெரிவித்த அவர்,

இவ்வாண்டில் டெங்கு தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்;வு மற்றும் அறிவிததல் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால்

நோய்கத்தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது, இவ்வாறு நோய்த்தாக்க்திற்குள்ளா னோர்களில்

அதிகளவானோர் வெளிமாவட்;டஙகளில் நோய்த்தொற்றுக்களுக்கு                உள்ளாகியிருக்கின்றனர்.

டெங்கு நோய்க்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக முன்னெடுகு;கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுறுறுச்

சூழலை பேணுதல் என்பவற்றுன் ஊடாக இவற்றை மேலும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.